2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

புத்தளம் பிரதேச செயலகம் மூடப்பட்டுள்ளது

Suganthini Ratnam   / 2013 ஜூன் 26 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ், எஸ்.எம்.முஸப்பிர்


புத்தளம் பிரதேச செயலாளர்  தாக்கப்பட்டமையைக் கண்டித்து புத்தளம் பிரதேச செயலகம் இன்று புதன்கிழமை மூடப்பட்டுள்ளதுடன், அப்பிரதேச செயலகத்தின் வெளியில் கறுப்புக்கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. அத்துடன்,  இப்பிரதேச செயலகத்தின் வெளிக்கதவும் மூடப்பட்டுக் காணப்படுகின்றது.

மேலும், புத்தளம் மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட கண்டன ஊர்வலமொன்று புத்தளம் நகரினூடாக தற்போது சென்றுகொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  புத்தளம், கல்பிட்டி, முந்தல், வண்ணாத்திவில்லு, கருவலகஸ்வெவ, ஆனமடுவ, நவகத்தேகம, மஹாகும்புகடவல ஆகிய பிரதேச செயலக அதிகாரிகளே புத்தளம் மாவட்ட செயலகத்திலிருந்து ஆரம்பமான இக்கண்டன ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க புத்தளம் மாவட்டத்திலுள்ள 16 பிரதேச செயலாளர் பிரிவுகளின் அதிகாரிகளும் புத்தளம், சிலாபம், வென்னப்புவ ஆகிய இடங்களிலும் இன்று புதன்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளனர்.  சிலாபம், ஆராய்ச்சிகட்டுவ, மஹாவெவ, மாதம்பை, நாத்தாண்டிய, பள்ளம ஆகிய பிரதேச செயலக அதிகாரிகள் சிலாபத்திலும் வென்னப்புவ, தங்கொட்டுவ ஆகிய பிரதேச செயலக அதிகாரிகள் வென்னப்புவவிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக பொலிஸாரும் மாவட்ட செயலக அதிகாரிகளும் தெரிவித்தனர்.






தொடர்புடைய செய்தி

புத்தளம் பிரதேச செயலாளர் மீது தாக்குதல்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .