2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பிரதேச செயலர் தாக்குதல்; ஒருவர் கைது

Super User   / 2013 ஜூன் 26 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் பிரதேச செயலாளர் மீதான தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரே இன்று புதன்கிழமை நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக பரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

புத்தளம் பிரதேச செயலாளர் மற்றும் அவரது வாகனச் சாரதி ஆகியோர் மீது நேற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த தாக்குதலை கண்டித்தும் சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரி இன்று புத்தளம் மாவட்ட செயலகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பட்டத்தில் மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயல உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X