2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

'சிறுமியுடன் குடும்பம் நடத்திவிட்டு சீதனம் கேட்ட இளைஞனுக்கு வலைவிரிப்பு'

Kanagaraj   / 2013 ஜூன் 27 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். எம். மும்தாஜ்

பெற்றோரிடமிருந்து 15 வயது சிறுமியை கடத்திச் சென்று 9 மாதங்களாக அச்சிறுமியுடன் குடும்பம் நடாத்தியதன் பின்னர் தனக்கு சீதனம் வேண்டுமென அச்சிறுமியை துன்புறுத்திவிட்டு தலைமறைவாகியுள்ள இளைஞனை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். 

வென்னப்புவ பொழுஞ்சாவாடி பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சந்தேகநபருடன் குறித்த சிறுமி காதல் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்துள்ளார். இதன் நிமித்தம் கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் சிறுமியின் காதலனான இளைஞன் சிறுமியை அவளது பெற்றோரிடமிருந்து கடத்திச் சென்றுள்ளார்.

பின்னர் இருவரும் குளியாபிட்டியில் உள்ள இளைஞனின் தந்தையின் வீட்டில் குடும்பம் நடத்தியுள்ளனர். அவ்வீட்டில் குடும்பம் நடத்திய இருவரும் ஒருமாதத்திற்கு பின் குருநாகலில் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று சில காலங்கள் தங்கியிருந்துள்ளனர்.

அதன் பின்னர் மீண்டும் வென்னப்புவ கொழுஞ்சாவாடி பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் தாய் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்; என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

இவ்வாறு இருக்கையில் சந்தேகநபரும் அவரது தாயும்  சீதனம் கேட்டு சிறுமியை துன்புறுத்தியுள்ளதுடன் அடித்துமுள்ளனர்.  இந்த துன்புறுத்தல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிறுமி இது தொடர்பில் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்தே குறித்த சந்தேகநபர் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். இந்நிலையிலேயே, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0

  • Murthy Friday, 28 June 2013 06:20 AM

    உடனடியாக கைதுசெய்ய வேண்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X