2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

புத்தளம் பிரதேச செயலர் மீது தாக்குதல்: சந்தேகநபர்களுக்கு அணிவகுப்பு

Kanagaraj   / 2013 ஜூன் 27 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம் மலிக் மற்றும் அவரது சாரதி ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் ஐந்து சந்தேக நபர்களையும் ஜூலை மாதம் 03 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு புத்தளம் நீதவான் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் நேற்றும், இன்று வியாழக்கிழமை மூவரும்  புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள், புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்திய போதே அவர்களை எதிர்வரும் 03 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் அன்றையதினம் அடையாள அணிவகுப்பை நடத்துமாறு உத்தரவிட்டார்.

பிரதேச செயலாளர் மற்றும் அவரது சாரதி ஆகியோர் தாக்கப்பட்டதினை கண்டித்து புத்தளம் மாவட்டத்தின் பிரதேச செயலகங்களின் அதிகாரிகள், கிராம சேவகர்கள், சமூர்த்தி அதிகாரிகள் உட்பட பலர் நேற்று புதன்கிழமை பாரிய எதிர்ப்பு ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை புத்தளம், சிலாபம், வென்னப்புவ ஆகிய நகரங்களில் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X