2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத வெடிபொருட்கள் வைத்திருந்தவர் கைது

Super User   / 2013 செப்டெம்பர் 24 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

சட்டவிரோதமான வெடிபொருட்களை  வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஆனமடு பொலிஸார் ஒருவரை கைது செய்துள்ளனர். ஆனமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோணிகல எனும் பிரதேசதத்தில் வைத்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மேற்கொள்ளப்பட்ட நவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 348 ஜெலக்நைட் கூறுகளும் 32 டெடனேடர்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நவடிக்கை மேற்கொண்டுள்ள ஆனமடு பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .