2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மின்கம்பத்துடன் மோதி பஸ் விபத்து

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 29 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி ஒன்று புத்தளம் பஸ் தரிப்பிடத்தில் உள்ள பஸ்  மின்கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளானது.

இதன்போது அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதமடைந்துள்ளதுடன் மின்கம்பமும் சேதமாகியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை குறித்த பஸ் வண்டியை பள்ளமான இடத்தில் நிறுத்திய சாரதி பஸ் வண்டியை விட்டு இறங்கிச் சென்றுள்ளார். இவ்வாறு நிறுத்தப்பட்ட   பஸ் வண்டி  தானாக முன்னோக்கிச் சென்று அங்கிருந்த மின்கம்பத்துடன் மோதியுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .