2025 ஜூலை 12, சனிக்கிழமை

வளர்ப்பு மகள் துஷ்பிரயோகம்: பெரியப்பா கைது

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 03 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

தனது சகோதரரின் 10 வயது மகளைப் துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்தியதாகச் கூறப்படும் 49 வயது பெரியப்பா முறையான ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் வட்டக்கள்ளி எனும் பிரதேசத்தில் வசித்து வரும் சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு தாயும் தந்தையும் இல்லை எனவும், தனது முத்த சகோதரியுடனேயே சிறுமி வளர்ந்து வருவதாகவும் தெரவிக்கப்படுகின்றது.

கடந்த 28 ஆம் திகதி அவசர வேலை ஒன்றின் நிமித்தம் வெளியே செல்லவேண்டியிருந்தமையினால் வீட்டைவிட்டுப் புறப்பட்டுள்ள சகோதரி, தனது தங்கையான சிறுமியை தந்தையின் மூத்த சகோதரனான பெரியப்பாவிடம் விட்டுவிட்டு சென்றுள்ளார். இந்த சமயமே சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனக்கு நேர்ந்தவை பற்றி சிறுமி தன் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். அதனையடுத்தே சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட சிலாபம் பொலிசார் சந்தேக நபரை புதன்கிழமையன்று கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரை சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .