2025 மே 09, வெள்ளிக்கிழமை

புத்தாக்க கண்டுபிடிப்பில் மாணவன் சாதனை

George   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் உயர்தரத்தில், உயிரியல் முறைமைகள் தொழில் நுட்ப பிரிவு (B-Tech) மாணவன் எம்.ஐ.எம்.இஸ்பாக் புத்தாக்க கண்டுபிடிப்பில் சாதனைப் புரிந்துள்ளார்.

மா அரி இயந்திரம், இடியப்பம் பிழியும் இயந்திரம், நவீன முறையிலான நீர்த்தாங்கி, புதிய அமைப்பிலான சவர அலகு, புதிய அமைப்பிலான வைப்பர், புதிய அமைப்பிலான ஒட்டடை துடைப்பான், வெள்ளப் பூண்டு உரிக்கும் இயந்திரம், கண் தெரியாதவர்களுக்கான உணரியுடன் கூடிய கைத்தடி, பாதை அமைப்பைக் காட்டும் வாகன கருவி, உணரி மூலமான பாதுகாப்பு முறைமை ஆகிய 10 கண்டுபிடிப்புகளை அவர் மேற்கொண்டுள்ளார்.

இந்த புதிய கண்டுபிடிப்புகளை ஊடகவியலாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (21) காலை கல்லூரியின் ஏ. எச்.எம். அஸ்வர் மண்டபத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X