2025 மே 09, வெள்ளிக்கிழமை

தங்கச்சங்கிலிகளை திருடிய இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வீதியில் தனியாகச் செல்லும் பெண்களின் தங்கச்சங்கிலிகளை மோட்டார் சைக்கிளில் வந்து பறித்துக்கொண்டு தப்பிச்செல்வதாகக் கூறப்படும்  இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை  கைதுசெய்துள்ளதாக சிலாபம் பொலிஸ் பிரிவின் தீர்க்கப்படாத குற்றங்களின்  விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

அத்துடன், இச்சந்தேக நபர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

நாத்தாண்டிய, தும்மோதரை பிரதேசத்திலுள்ள வீடொன்றில் மறைந்திருந்தபோது இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.  24 மற்றும் 25 வயதுடைய இச்சந்தேக நபர்களில் ஒருவர் வான்படையில் பணியாற்றிவிட்டு தப்பிச்சென்றதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

வீதியில் தனியாகச் செல்லும் பெண்களின்  தங்கச்சங்கிலிகளை பறித்துச் சென்று அவற்றை விற்பனை செய்ததுடன், தரிப்பிடங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த  மோட்டார் சைக்கிள்களை திருடியதாகவும் பொலிஸார் கூறினர்.

புத்தளம், குளியாப்பிட்டி, வென்னப்புவ மற்றும் தும்மலசூரிய போன்ற பிரதேசங்களில் இவர்கள் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வென்னப்புவ பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X