2025 மே 09, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மாடுகள் மீட்பு: நால்வர் கைது

Kogilavani   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


மதவாச்சியில் இருந்து புத்தளம் ஊடாக  ராகமைக்கு சட்டவிரோதமான முறையில் மாடுகளை ஏற்றிச்சென்ற இரண்டு லொறிகளை முந்தல் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் நால்வரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.

இதன்போது இரண்டு லொறிகளில்  கொண்டு செல்லப்பட்ட 33 மாடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய புதன்கிழமை(10) பத்துளுஓயா பொலிஸ் வீதிக்கடவையில் வைத்து குறித்த லொறிகளை மறித்து பொலிஸார் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

மேற்படி நால்வரையும் வியாழக்கிழமை(11) புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுதத்வுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அத்துடன் பரலண்கட்டுப் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக மரங்களை வெட்டி லொறியில் ஏற்றிச் செல்லப்பட்ட மரக்குற்றிகளையும் முந்தல் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரனைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X