Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் 2001ஆம் ஆண்டு திறந்து வைக்கப்;பட்ட ஏழு மாடிகளைக் கொண்ட புதிய கட்டடத்தில் நிலவும் நீர் கசிவு, மின்சார கட்டமைப்பு, போதிய வசதிகள் இல்லாமை, பிரேத அறையில் உள்ள குறைபாடுகள், வடிகான் மற்றும் மலசல கழிவகற்றல் குறைபாடுகள் தொடர்பில் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பொது மக்கள் சிலர் தெரிவிக்கையில்,
வைத்தியசாலையின் புதிய கட்டடம் உடைந்து விழக்கூடிய அபாயத்தில் உள்ளது. விபரீதம் ஒன்று நிகழ்ந்த பின்னர் அதுபற்றி வருந்திப் பயனில்;லை.
மழைக் காலங்களில் புதிய கட்டடத்தில் மின்சாரத் தடை ஏற்படும். மின்உயர்த்தி செயலிழந்துவிடும். மழைபெய்யும் போது மின்உயர்த்தி வழியாக நீர் ஓடுகிறது.
நோயாளிகள் தங்கியுள்ள விடுதிகளில் நீர்க்கசிவு பல வருடங்களாக தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டு இருக்கிறது. நோயாளிகளின் கட்டிலின் கீழே பாத்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதை சர்வ சாதாரணமாக அவதானிக்கலாம்.
அந்த விடுதியில் நீர் கசிவை தடு;க்கும் பொருட்டு தகரம் பொருத்தப்பட்டுள்ளது. மின் விசிறிகள் பல செயலிழந்துள்ளன. பல மில்லின் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டடம் சில வருடங்களில் அபாய நிலையை அடைந்துள்ளமைக்குக் காரணம் தரக் குறைவான முறையில்; கட்டப்பட்டமையும் ஊழலுமாகும் என்றனர்.
இது தொடர்பாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சம்பா அளுத் வீர தெரிவிக்கையில்,
வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் தினமும் 1,800க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வருகின்றனர். புதிய கட்டடத்தில் நீர் ஒழுக்கு, கொங்ரீட் பழுதடைதல், மற்றும் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளன.
குறைபாடுடைய மாடிக் கட்டடத்துக்கு பதிலாக புதிய கட்டடம் ஒன்றின் தேவை அறியப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.
இதேவேளை, வைத்தியசாலையில், கட்டாக்காலியாக சுற்றித் திரியும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இரவு வேளைகளில், வைத்தியசாலைக்கு சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்து செல்வோரை இந்த நாய்கள் குரைத்தபடி துரத்திச் செல்வதாகவும் வைத்தியசாலைக்கு வருவோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago