2025 மே 08, வியாழக்கிழமை

கடனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 13 இலட்சம் ரூபாய் மோசடி

Sudharshini   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி 13 இலட்சம் ரூபாயை மோசடி செய்த கல்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த நபர் தொடர்பில், சிலாபம் குற்றதடுப்பு விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், சிலாபம் வீதியில் வசிக்கும் ஜெராட் பொன்னம்பெருமகே சஞ்ஜீவ என்பவர் செய்த முறைப்பாட்டையடுத்தே மேற்படி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்பிட்டி கண்டக்குழி பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி சந்தேகநபர், கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, 13 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும்  அவர் வாக்களித்தபடி கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தரவில்லை எனவும் தான் வழங்கிய பணத்தையும்; தராமல் மோசடி செய்துள்ளார் என முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

மேற்படி சம்பவம் தொடர்பில் சிலாபம் பிரிவின் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X