2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

புத்தளம் விபத்தில் இளைஞன் பலி: ஒருவர் காயம்

Kanagaraj   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். எஸ். முஸப்பிர்

புத்தளம்-குருநாகல் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன்; உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் காயங்களுக்குள்ளாகி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் ரக லொறி மோதியே இவ்விபத்துஇன்று காலை 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த 19 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தளம் குருநாகல் பிரதான வீதியில் 3ஆம் மைல் கல் பொரலை சந்தியில் வைத்தே இவ்விபத்து  இடம்பெற்றுள்ளது. புத்தளத்திலிருந்து குருநாகல் திசையில் பயணித்த டிப்பர் வாகனம் பொரலை உள் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

இதில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் மோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். 17 வயதுடைய மற்றைய இளைஞர் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் லொறிச் சாரதி புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X