Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 28 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் மீனவர்கள், புத்தளம் நகர மத்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
புத்தளம் ஸ்டார் மீனவர் சங்கம், உதவும் கரங்கள் மீனவர் சங்கம், நியூ அம்பர் மீனவர் சங்கம், தில்லையடி எக முது மீனவர் சங்கம், அல் அமீன் மீனவர் சங்கம் என்பன இணைந்தே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், புத்தளம் நகர மத்தியிலிருந்து புத்தளம் நகர சபையின் வெண் பணிமனைக்கு பேரணியாக சென்று புத்தளம் நகர முதல்வரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளருமான கே.ஏ. பாயிசிடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்திலிருந்து அநுராதபுரத்துக்கு மின்சாரத்தை கொண்டு செல்லும் பொருட்டு புத்தளம் கடல் ஏரியில் மின் கம்பங்கள் நாட்டப்படுவதை தாம் ஆட்சேபிக்கவில்லை என்றும் அவர்கள் அந்த மகஜரில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், புத்தளம் நகர மற்றும் இலங்கை மின்சார சபைகளினால் புத்தளம் கடற்கரை பிரதேசத்துக்கு கிடைக்;க வேண்டிய அபிவிருத்திகள் தொடர்ந்தும் கிடைக்க வேண்டும் என்றும் அந்த மகஜரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்களினால் கையளிக்கப்பட்ட மகஜரை கையேற்ற புத்தளம் நகர முதல்வர் கே.ஏ. பாயிஸ், கடந்த ஆட்சியின் போது இத்திட்டம் கைச்சாத்திடப்பட்டது. மூன்றில் இரண்டு சதவீதமான உதவிகள் கிடைத்துள்ளன.
தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சியில் இந்த திட்டத்துக்கான உதவிகளை தொடர்ந்தும் பெற்றுகொள்வதற்கு நாம் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
அவர் வழங்கிய உறுதிமொழியையடுத்து பேரணியாக வந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago