2025 மே 07, புதன்கிழமை

கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்ட நபர் கைது

Gavitha   / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

வென்னப்புவ, கடவத்தை வீதியில் அமைந்துள்ள நவீன ரக வீடொன்றில்  சட்டவிரோதமாக கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நபரை, திங்கட்கிழமை (27) கைது செய்யததாகவும் கசிப்பு, கோடா பரல்கள் மற்றும் கசிப்பு தயாரிப்புக்காக பயன்படுத்திய சில உபகரணங்களையும் கைப்பற்றியதாகவும் வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுனேரிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பையடுத்தே குறித்த நபர் கசிப்பு தயாரிப்பது தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டிலிருந்து 10 கோடா பரல்கள், 50 கசிப்பு போத்தல்கள்,  இரண்டு கேஸ் அடுப்புக்கள், இரண்டு கேஸ் சிலிண்டர்கள் உட்பட மேலும் சில பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் குறித்த வீட்டை மூன்று மாதங்களுக்கு முன்னர் 12 ஆயிரம் ரூபாய்  மாத வாடகைக்கு பெற்றுள்ளதாகவும் அந்த வீட்டின் உரிமையாளர் இத்தாலியில் தொழில் புரிந்து வருவதாகவும்  விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் காலத்துக்குக் காலம் வீடுகளை வாடகைக்கு எடுத்து கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளமை மேலதிக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான  நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X