Princiya Dixci / 2015 ஏப்ரல் 29 , மு.ப. 08:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அத்தையின் மூக்கை, அவரது உறவினர் பெண்ணொருவர் தேநீர் கோப்பையினால் தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று ஆனமடுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களிடையே கடந்த 24ஆம் திகதி கைகலப்பு இடம்பெற்றுள்ளது.
இந்த கைகலப்பில் உறவு முறையான பெண்ணொருவர் தேநீர் கோப்பையினால் தாக்கியதில் அவரது அத்தை முறையான 40 வயதான பெண்ணின் மூக்கில் காயம் ஏற்பட்டுள்ளது.
சந்தேகநபரான 27 வயதான யுவதி, ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததன் பின்னர் அவரை கைது செய்துள்ளதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் உபுல் பியலாலின் ஆலோசனையின் பிரகாரம் உப - பரிசோதகர் விக்கிரமசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
6 minute ago
23 minute ago
31 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
23 minute ago
31 minute ago
36 minute ago