2025 மே 07, புதன்கிழமை

அம்புலன்ஸ் மோதி ஒருவர் படுகாயம்

Thipaan   / 2015 மே 02 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

முந்தல், பத்துளு ஓயா பிரதேசத்தில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுpலாபத்திலிருந்து தப்போவ நோக்கி சென்று கொண்டிருந்த அம்புலன்ஸ் வண்டி, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து முந்தல் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளினையடுத்து, தப்போவ வைத்தியசாலையின் அம்புலன்ஸ் சாரதி கைது செய்யப்பட்டதுடன் அம்புலன்ஸ் வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

பத்துளு ஓயா பிரதேசத்தினை சேர்ந்த முஹம்மது சப்ராஸ் எனும் நபரே காயமடைந்து சிலாபம் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

முந்தல் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X