2025 மே 07, புதன்கிழமை

கட்டடம் திறந்து வைப்பு

Sudharshini   / 2015 மே 02 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். எஸ். முஸப்பிர்

புத்தளம் மாவட்டத்திலுள்ள கடற்றொழிலாளர்கள், விவசாயிகள், பால் பண்ணையாளர்களின் நலன் கருதி, வடமேல் மாகாண விவசாய, கடற்றொழில், மிருக வளர்ப்பு மற்றும் அபிவிருத்தி, சிறு நீர்ப்பாசன மற்றும் கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் அலுவலகக் கட்டடத் தொகுதி சிலாபத்தில் வியாழக்கிழமை (30) திறந்து வைக்கப்பட்டது.

வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தார்.

வடமேல் மாகாண விவசாய, கடற்றொழில், மிருக வளர்ப்பு மற்றும் அபிவிருத்தி, சிறு நீர்ப்பாசன மற்றும் கமத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் சனத் நிசாந்த பெரேராவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் விக்டர் எண்டனி பெரேரா, வடமேல் மாகாண அமைச்சர் சந்யா குமார ராஜபக்ஷ, வடமேல் மாகாண சபை உறுப்பினர் பாலித ரோஹன உட்பட புத்தளம் மாவட்டத்தினைச் சேர்ந்த அதிகமான விவசாயிகளும் கலந்து கொண்டனர்.

சிலாபத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த புதிய அமைச்சுக் கட்டிடத்தில் வடமேல் மாகாணத்தின் ஏனைய அமைச்சுக்களும் வருங்காலங்களில் இயங்க உள்ளதாக மகாணா அமைச்சர் சனத் நிசாந்த தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X