Sudharshini / 2015 மே 02 , மு.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.என்.எம். ஹிஜாஸ்
புத்தளம், பத்துளு ஓயாப் பகுதியில் சட்விரோதமான முறையில் இயங்கி வந்த மதுபான உற்பத்தி நிலையமொன்றை முந்தல் பொலிஸார் வெள்ளிக்கிழமை (01) இரவு சுற்றி வளைத்துள்ளனர்
கனக்கட்டிக் குளத்தின் நடுப்பகுதியில் இயங்கி வந்த குறித்த மதுபான உற்பத்தி நிலயத்திலிருந்து கோடாக்கள் உள்ளடங்கிய 20 பரல்கள், 10 கொள்கலன்கள் மற்றும் ஒரு படகையும் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி மது உற்பத்தி நிலையத்தி உரிமையாளர் மற்றும் இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் முந்தல் பொலிஸார் ஈடுபட்டுள்ளதொடு மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago