2025 மே 07, புதன்கிழமை

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ வீரர் உட்பட இருவர் கைது

George   / 2015 மே 10 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

நாட்டின் பல பிரதேசங்களில் உள்ள கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களுடன், இராணுவத்தில் இருந்து தப்பி வந்த ஒருவர் உட்பட சந்தேகநபர்கள் இருவரை ஞாயிற்றுக்கிழமை(10) கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

மகாவௌ மற்றும் புத்தளம் ஆகிய பிரதேசங்களில் வைத்து  இருவரையும் கைது செய்துள்ள முந்தல் பொலிஸார் அவர்களிடமிருந்து  சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களையும் மீட்டுள்தாக கூறினர். 

இலத்திரனியல் உபகரணங்கள், தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டைகள், மின்குழிழ்கள் உட்பட பல பொருட்கள் அடங்குவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

புத்தளம், மகாவௌ மற்றும் பியகம பகுதிகளில் உள்ள வீடுகளில் வைக்கப்பட்டிருந்த நிலையில்  குறித்த பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பியகம பகுதியில் வாடகைக்கு அறை ஒன்றை பெற்றுக் கொண்டு கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரரை இராணுவ பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளதுடன் மற்றைய சந்தேக நபரை, மீட்கப்பட்டுள்ள பொருட்களுடன் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக முந்தல் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X