2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் பலி

Thipaan   / 2015 மே 11 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

கற்பிட்டி துறையடி பகுதியில் திங்கட்கிழமை காலை கத்திக்குத்துக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியின் தந்தையை கத்தியினால் தாக்கியதாகவும் அதனையடுத்து அங்கிருந்த தாக்கப்பட்டவரின் மைத்துனர் அதனை தடுக்க முற்பட்ட போது சந்தேக நபர் அவர் மீதும் கத்தியினால் தாக்கியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தாக்குதலினால் சந்தேக நபரின் மாமனார் பலத்த காயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் சிலாபத்தில் வதியும் அவரின் மைத்துனர் ரஹீம் அப்துல் (52) என்பவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலினை நடாத்திய சந்தேக நபர் தனது மகளினையும் அழைத்துக்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் கற்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X