2025 மே 07, புதன்கிழமை

விபத்தில் இராணுவ வீரர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2015 மே 18 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் -அநுராதபுரம் வீதியின் 16ஆம் கட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று  சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டுக்கச்சி எத்துன்கொட பிரதேசத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான நிசாந்த லக்மால் (வயது 25) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அநுராதபுரத்திலிருந்து புத்தளம் நோக்கி சென்றுகொண்டிருந்த  கப் ரக  வாகனமும்  இராணுவ வீரர் செலுத்திச் சென்றுகொண்டிருந்த  முச்சக்கரவண்டியுமே நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  நேருக்குநேர்  மோதியது.    

நொச்சியாகம ஹெலபேவ பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் பணியாற்றிவருகின்ற இந்த வீரர், கொட்டுக்கச்சி பிரதேசத்திலுள்ள தனது வீட்டிலிருந்து  தான் பணியாற்றும் முகாமுக்கு முச்சக்கரவண்டியில்  சென்றுகொண்டிருந்தபோதே விபத்துக்குள்ளானார் என்று  பொலிஸார் கூறினர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இராணுவ வீரர் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே  அங்கு உயிரிழந்துள்ளார்;.

இந்த விபத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் கப் ரக வாகன சாரதியை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த விபத்து தொடர்பில் சாலியவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X