2025 மே 07, புதன்கிழமை

நான்காவது பட்டமளிப்பு விழா

Thipaan   / 2015 மே 18 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

முந்தல் பிரதேச செயலகத்துக்குட்பட்ட மதுரங்குளியில் அமைந்துள்ள மேர்சி கல்வி வளாகத்தினால் மேற்கொள்ளப்படும் பல்வேறு தொழிற்பயிற்சி பாடநெறிகளை நிறைவு செய்தவர்களுக்கான நான்காவது பட்டமளிப்பு விழா, வளாக கேட்போர் கூடத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது.

மேர்சி கல்வி நிலைய பொறுப்பாளர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை மற்றும் மாலைதீவுகளின் குவைத் தூதுவர் அஷேய்க் யாகூப் யூசுப் அல் அதீகி பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாடநெறியினை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மேர்சி கல்வி வளாகத்தினால் நடாத்தப்படும் பல்வேறு தொழில் பயிற்சி நெறிகளைப் பூர்த்தி செய்த 61 மாணவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டதோடு, அவர்களுக்குத் தேவையான தொழில் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X