2025 மே 07, புதன்கிழமை

வென்னப்புவவில் கசிப்பு நிலையம் முற்றுகை; இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 மே 19 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போலவத்தை பிரதேச ஜின்ஓயாவின் கரையோரத்தில்; இயங்கிவந்த  சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையமொன்றை முற்றுகையிட்டதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை கைதுசெய்ததாக புத்தளம் பொலிஸ் பிரிவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை திங்கட்கிழமை (18) முற்றுகையிட்டதுடன், அங்கிருந்து 16 கோடா பரல்கள், நான்கு செப்புக்கம்பிச் சுருள்கள் உள்ளிட்ட  பொருட்களை கைப்பற்றியதாகவும் அவர்கள் கூறினர்.

இந்தச் சந்தேக நபர்கள் இருவரும்  கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கடந்த சில மாதங்களாக  கூலிக்கு  பணியாற்றி வந்துள்ளார்கள் என்று தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X