2025 மே 07, புதன்கிழமை

இறுதிக்கட்ட கொடுப்பனவு வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 மே 26 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

வீட்டுக்கடன் திட்டத்தின் இறுதிக்கட்ட கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (26) காலை ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மி தலைமையில் ஐ.தே.கா.வின் புத்தளம் தொகுதி காரியாலயத்தில் இடம்பெற்றது.

புத்தளம் ஏழாம் வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட வசதிகள் அற்ற ஏழ்மை குடும்பத்தினருக்கு இதன்போது வீட்டு கடனுதவிகள் வழங்கப்பட்டன.

வீடமைப்பு, சமூர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாசவின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பித்து வைக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம்  புத்தளம் தேர்தல் தொகுதியில் இதுவரைக்கும் வீட்டுகடன் திட்டத்துக்காக 317 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

புத்தளம் தேர்தல் தொகுதியில் மட்டும் 500 பேர் இந்த வீட்டு கடன்திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு தகுதி  பெற்றுள்ளனர்.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் டீ.ஏ.பியதர்சன, புத்தளம் பிரதேச உதவி பணிப்பாளர் உதித, புத்தளம் தொகுதி ஐ.தே.கவின் இளைஞர் அமைப்பாளர் எம்.என்.எம்.நுஸ்கி, புத்தளம் ஏழாம் வட்டார  ஐ.தே. கட்சியின் அமைப்பாளர் எச்.யூ.ஹிஸாம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X