2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

அச்சு இயந்திரம் மற்றும் நூல்கள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 ஜூன் 07 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரியில் இயங்கும் சிங்கள தஃவா பிரிவுக்குத் தேவையான நூல்கள் மற்றும் அச்சு இயந்திரம் என்பவை வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸினால் இன்று ஞாயிற்றுக்கிழமை (07) பெற்றுக்கொடுக்கப்பட்டது.  

கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் முனீர், சிங்கள தஃவா பிரிவின் பொறுப்பாளர் ஹாஜா ஸஹாப்தீன் உட்பட கல்லூரியின் பணிப்பாளர் சபை உறுப்பினர் முஹம்மத் இஸ்மத் ஆகியோரிடம் மாகாண சபை உறுப்பினர் இவற்றை ஒப்படைத்தார். 

முகாமையாளர் மூசின் மற்றும் புத்தளம் நகர சபையின் முன்னாள்  தலைவர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி ஆகியோர் இதில் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X