2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

பொலிஸ் அதிகாரிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் சந்திப்பு

Sudharshini   / 2015 ஜூலை 01 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு  பிராந்திய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகளுக்கும்  நீர்கொழும்பு பிராந்திய ஊடகவியலாளர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நீர்கொழும்பு  பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்றது.

நீர்கொழும்பு  பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர அபேவிக்ரம, உதவி பொலிஸ் அத்தியட்சகர் அசோக்க விஜேரத்ன, நீர்கொழும்பு  பிராந்திய பொலிஸ் அத்தியட்சகரின்  அதிகாரத்துக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இதன்போது, நீர்கொழும்பு நகரில் இடம்பெற்று வரும்  பல்வேறு குற்றச் செயல்கள்,  செய்தி சேகரிப்பின் போது ஊடகவியலாளர்களுக்கு பொலிஸ் அதிகாரிகள் உதவுதல் உட்பட நகர மக்களின் நலன்சார் பொது விடயங்களில் இரு தரப்பினரும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X