Thipaan / 2015 ஜூலை 04 , மு.ப. 04:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். எஸ். முஸப்பிர், எம்.என்.எம். ஹிஜாஸ்
693 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த நபரை புத்தளம் பாலாவி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார்.
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில், யாழப்பாணம்- கொழும்பு பஸ்ஸிலிருந்து இறங்கி பாலாவி பிரதேசத்தில் நின்ற போதே புத்தளம் பிரிவின் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலாவி சந்தியில் நின்றிருந்த சந்தேக நபரைக் கைது செய்து அவரைச் சோதனையிட்ட போது அவரின் பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோய்னை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த ஹெரோய்ன் ப்ளாஸ்டிக் போத்தல் ஒன்றில் அடைத்து மிகவும் சூட்சுமமான முறையில் பயணப் பையில் மறைத்து வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவரிடம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago