2025 மே 07, புதன்கிழமை

'சிறுபான்மை வேட்பாளர்கள் ஒரே அணியில் போட்டியிட வேண்டும்'

Thipaan   / 2015 ஜூலை 08 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தினை சேர்ந்த சிறுபான்மை வேட்பாளர்கள் ஒரே அணியில் போட்டியிட வேண்டுமென புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் அப்துல்லா மஹ்மூத் ஆலிம், புதன்கிழமை(08) தெரிவித்தார்.

இதன்மூலமே புத்தளம் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இழக்கப்பட்டு வரும் சிறுபான்மை நாடாளுமன்ற பிரதிநிதியினை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்குமென அவர் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்ட சிறுபான்மை வேட்பாளர்கள், பிரதான கட்சிகளிலும் சுயேட்சை குழுக்களிலும் போட்டியிட தயாராகி வருகின்றனர். இது தொடர்பில் அவரிடம் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சிகளிலும், சுயேட்சைக் குழுக்களிலும் தனித்தனியாக போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் புரிந்துணர்வுடனும் விட்டுக்கொடுப்புடனும் ஒரே குடையின் கீழ் போட்டியிட வேண்டும் என்பதே  புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபையின் எதிர்ப்பார்ப்பு என  அவர்  மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X