2025 மே 07, புதன்கிழமை

சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தியவருக்கு வலைவீச்சு

Thipaan   / 2015 ஜூலை 09 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

ஆறு வயது சிறுமியை தாயிடமிருந்து அழைத்துச்சென்று துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய ஒருவரை தேடிவருவதாக கருவலகஸ்வெவ பொலிஸார், வியாழக்கிழமை(09) தெரிவித்தனர்.

இது தொடர்பில், தப்போவ பிரதேசத்தைச்; சேர்ந்த 30 வயதான  விவசாயியொருவரையே தேடிவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருவலகஸ்வௌ பிரதேச செயலகத்துக்குட்பட்ட தப்போவ கிராமத்தில், தனது மகளுடன் விளையாடுவதற்கு என கூறி, தாயிடமிருந்து சிறுமியை அழைத்துச்சென்ற குறித்தநபர், சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார்.

சிறுமியை துஷ்பிரயோகப்படுத்தப்பட்டதாக சிறுமியின் பெற்றோர், கருவலகஸ்வௌ பொலிஸ் நிலையத்தில்   புதன்கிழமை(07) மாலை முறைப்பாடு செய்துள்ளதாக் தெரிவித்த பொலிஸார், குறித்தநபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X