2025 மே 07, புதன்கிழமை

உறவினர் வீட்டுக்கு மின்சாரம் வழங்க முயற்சி: இளைஞன் பலி

Thipaan   / 2015 ஜூலை 09 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின்சாரம் தாக்கி சிலாபம் வட்டக்கல்லிய பிரதேசத்தில் இளைஞன் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முத்தைய்யா ஸ்ரீ குமார் (வயது 25) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞரின் வீட்டுக்கு அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு மின்சார இணைப்பை வழங்குவதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில்  இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
 
மின்சார தாக்குலுக்குள்ளாகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சிலாபம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X