Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Thipaan / 2015 ஜூலை 13 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம். ஹிஜாஸ்
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், இன்று திங்கட்கிழமை(13) புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவு அத்தாட்சி அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, பொதுபல சேனா உள்ளிட்ட கட்சிகளும், சுயேட்சை குழுக்களுமே வேட்புமனுத்தாக்கல் செய்தன.
எதிர்வரும் நாடளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் எம்.என்.எம். நஸ்மி. எம்.எச்.எம் நவாவி, ஏ.எச். பைறுஸ், வி. கமலன் கந்தன் ஆகிய நான்கு சிறுபான்மை இனத்தவர்கள் போட்டியிடுகின்றனர்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் எஸ்.எச்.எம். முஸம்மில் மற்றும் ஜே.வி.பி சார்பில் மொஹம்மது மொஹிடீன் ஆகியோர் சிறுபான்மை மக்கள் சார்பில்போட்டியிடுகின்றனர்.
முன்னாள் புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ. பாயிஸ், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா , முன்னாள் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம். இன்பாஸ் உள்ளிட்ட குழுவினர் ஓய்வு பெற்ற மாவட்ட பொறியியலாளர் பி.ஐ.எம். ஜிப்ரி தலைமையிலான சுயேட்சை குழுவில் போட்டியிடுகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
5 hours ago