2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

நோன்பு பெருநாளை முன்னிட்டு இலவச ஆடைகள் அன்பளிப்பு

Princiya Dixci   / 2015 ஜூலை 15 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தினால் வறுமை நிலையில் வாழும் மக்கள், புனித நோன்பு பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் பொருட்டு புதிய ஆடைகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

புத்தளம் ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தில் வைத்து திங்கட்கிழமை (13) இந்த புதிய ஆடைகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எச். அப்துல் நாசர் (ரஹ்மானி), இந்த இலவச ஆடைகளை வழங்கி இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.

புத்தளம் நகரிலுள்ள பள்ளிவாசல்களின் எல்லைகளில் வாழும் ஏழ்மை மக்களிலிருந்து ஒவ்வொரு பள்ளிவாசல் எல்லைகளிருந்து தலா ஐந்து குடும்பங்களின் சகல அங்கத்தவர்களும் இதற்கென தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

புனித நோன்பு காலத்தில் இந்த ஆத்மீக ஒருமைப்பாட்டு நிலையத்தினால் ஏழை மக்கள் பலருக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு பல்வேறு பிரதேசங்களில் இப்தார் நிகழ்வுகளும் நடத்தப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X