2025 மே 07, புதன்கிழமை

மாடுகளை அறுத்து விற்பனை செய்த இருவர் கைது

Princiya Dixci   / 2015 ஜூலை 16 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ் 

புத்தளத்தில் பல்வேறு இடங்களில் மாடுகளைத் திருடி, இறைச்சிக்காக கொழும்புக்கு அனுப்பி வந்த இருவரை நேற்று புதன்கிழமை (15) கைது செய்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த இவ்இருவரும் சிலாபம் விஜயகட்டுபொத பிரதேசத்தில் ஒளிந்திருந்த போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் இருவரும் நீண்ட காலமாக பல மாட்டுத் திருட்டுகளுடன் தொடர்புபட்டிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் தொடர்ந்தும் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X