2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கார் விபத்தில் ஐவர் காயம்

Princiya Dixci   / 2015 ஜூலை 17 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

புத்தளம், நுரைச்சோலை பிரதேசத்தில் மின்கம்பத்துடன் கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் நுரைச்சோலை அனல் மின் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்து, புதன்கிழமை (15) இடம்பெற்றுள்ளதாகவும் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் மின்கம்பத்துடன் மோதியுள்ளதாகவும்  புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X