2025 மே 07, புதன்கிழமை

11வயது சிறுமி துஷ்பிரயோகம்: வயோதிபர் கைது

Thipaan   / 2015 ஜூலை 20 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்கன்னி பிரதேசத்தைச் சேர்ந்த பதினொரு வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய  அதே பிரதேசத்தைச் சேர்ந்த  63 வயதுடைய  வயோதிபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவியான குறித்த சிறுமி தனது பாட்டியின் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது அச்சிறுமியைக் கண்ட சந்தேக நபரான முதியவர் சிறுமியை பலவந்தமான கடத்திச் சென்று இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபரை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் இடம்பெற்ற போது,  சந்தேக நபர் அதிக மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக கல்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கல்பிட்டி பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X