2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

கொள்ளையர்கள் 20 பேர் கைது

Princiya Dixci   / 2015 ஜூலை 22 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர

புத்தளத்திலுள்ள சில பிரதேச வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் பயன்படுத்தி வரும் தண்ணிர் இறைக்கும் இயந்திரம், மற்றும் வீட்டு உபகரணங்களை கொள்ளையடித்ததுச் சென்ற 20 பேரை புத்தளம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேசன் தொழில் செய்பவர்கள் என  விசாரணையில் தெரியவந்துள்ளது.

புத்தளம், கல்பிட்டி, பாலாவி, உடப்பு, வன்னிதீவு, ஆகிய பிரதேசங்களிலுள்ள 17 தண்ணீர் இறைக்கும் இயந்திரம், வாகன மின்கலம், சைக்கிள், வீட்டு கதவுகள்  என்பனவற்றை கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X