Princiya Dixci / 2015 ஜூலை 23 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
புத்தளம் மாவட்டம் கற்பிட்டி, ஏத்தாளை பிரதேசத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார் என கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி, குறிஞ்சிப்பிட்டியைச் சேர்ந்த ஹமீட் ஹூஸைன் முஹம்மது நஸீம் என்ற 33 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புத்தளம் ஊடாக கற்பிட்டியை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு செந்தமான பஸ், ஏத்தாளை பஸ் தரிப்பிடத்தில் நிறுத்திய போது பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டட போது குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளார். மற்றைய இளைஞர் தொடர்ந்தும் புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
இந்த விபத்து தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
42 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
57 minute ago