Thipaan / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்
எதிர்வரும் நடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பத்து ஆசனங்களை கைப்பற்றும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அமைச்சருமான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புத்தளம் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐ.தே.கட்சியில் இணைந்து போட்டியிடும் ஏ.எச்.எம். பைறூசை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக் கூட்டம் கல்பிட்டி முதலைப்பாளி பொது விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (01) மாலை இடம்பெற்றது.
அந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
முதலாவது முஸ்லிம் சபாநாயகர் எச்.எஸ்.இஸ்மாயிலை, முன்னாள் நிதி அமைச்சர் எம்.எச்.எம். நெய்னா மரைக்காரை பெற்றெடுத்த புத்தளம் தொகுதி, 26 வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினரை இழந்து தவித்த போது தேசிய பட்டியல் மூலமாக அந்த பிரதிநிதித்துவத்தை வழங்கி அழகு பாரத்தது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
இம்முறை தேர்தலில் என்றுமில்லாதவாறு புத்தளம் தொகுதியில் மூன்று முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். புத்தளம் தொகுதி முஸ்லிம்கள் நன்றாக சிந்தித்து இம்முறை வாக்களிப்பதன் மூலம் மூன்று உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் வரலாற்று சாதனையை அடைந்து கொள்ளும் சந்தர்ப்பம் இம்முறை ஏற்பட்டுள்ளது.
கல்பிட்டி பிரதேசத்திலிருந்து வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில் பெரிய கட்சிகள் விட்ட தவறை ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் மாற்றியமைத்து இம்முறை தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தி கல்பிட்டி பிரதேசத்துக்கு கௌரவம் வழங்கியுள்ளது.
புத்தளம் நகரில் எம்.பி. வேண்டும் என்று அங்கலாய்த்த ஒரு கூட்டம் இன்று ஒட்டகத்தில் போய் ஏறி அமர்ந்துள்ளது. பாலைவனத்தை நோக்கிய பயனாகவே அவர்களின் பயணம் அமைந்துள்ளது.
ஐ.தே.க.வானது புத்தளம் தொகுதியில் அடைந்து கொள்ளும் வெற்றி புத்தளம் மாவட்டத்தை வெல்ல வைத்த சந்தர்ப்பங்கள் கடந்த காலத்தில் ஏற்பட்டுள்ளன.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதியை வெற்றியடைய செய்தது போல நாம் இம்முறை ஐ.தே.முன்னணியை வெற்றியடசெய்யவேண்டும். நாம் அடையப்போகும் பத்து ஆசனங்களில் பைறூஸ் அவர்களையும் இணைத்துக்கொள்ளும் போராட்டத்தில் நாம் இறங்கியுள்ளோம் எனக்கூறினார்.


2 hours ago
3 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
01 Feb 2026