Thipaan / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம். ஹிஜாஸ்
புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக போட்டியிட்டு மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எச்.எம். நவவியின் பெயர் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலில் உள்ளடங்கிய தகவல் புத்தளத்தில் பரவியதினையடுத்து புத்தளம் மக்கள் நள்ளிரவினை தாண்டியும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுப்பட்டனர்.
40 வருடங்களுக்கு மேல் அரசியல் அனுபவமுடைய எம்.எச்.எம். நவவி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்டார்.
இந்நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியலுக்கு வட மேல் மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம். நவவியின் பெயர் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந் நிலையில் நேற்று இரவு புத்தளம், கற்பிட்டி, ரத்மல்யாய உட்பட புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு கொழுத்தி மக்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 26 வருடங்களாக நாடாளுமன்ற தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் எந்தவொரு கட்சியினை சேர்ந்த சிறுபான்மை சமூகத்தவரும் வெற்றிபெறாத நிலையில் புத்தளத்துக்கு வழங்கப்பட்ட இரண்டாவது தேசிய பட்டியல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
7 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago