2025 மே 22, வியாழக்கிழமை

250 விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கல்

Super User   / 2013 பெப்ரவரி 14 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

'ரண்பிமட அருணலு' வேலைத்திட்டத்தின் கீழ் 250 விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வரட்சி மற்றும் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மேலதிக பயிர்ச் செய்கையில் ஈடுபடும் பொருட்டே இந்த இயந்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 2 கோடி 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை, துருவில நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் 130 மில்லியன் ரூபா செலவில் மஹநெலுபாவ, பாவக்குளம் ஆகிய கிராம மகக்ளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நான்கு வருடங்களுக்குள் ரஜரட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கத் தேவiயான சகல நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X