2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

38 கிராமிய வீதிகளைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 05 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்             

தேசத்திற்கு மகுடம் தேசிய கண்காட்சி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 38 கிராமிய வீதிகளைப் புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதிலும், இதுவரையில் 13 திட்டங்களே நிறைவு பெற்றுள்ளன. மீதி 25 வீதிகளுக்கு கார்ப்பட் இடும் பணிகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக வடமத்திய மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் சிங்கரத்ன தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண வீதி அதிகார சபையின் அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சீ, டீ வகையான 1947 கிலோமீற்றர் நீளமான வீதிகள் உள்ளன. இவற்றில் 300 கிலோமீற்றர் நீளமான வீதியினைப் புனரமைப்புச் செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியும் ஜெய்க்கா அமைப்பும் இணைந்து 5000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.

வடமத்திய மாகாணத்திலுள்ள வீதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியும் ஜெய்க்கா  அமைப்புமே அதிகளவிலான நிதியை வழங்கி வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X