Editorial / 2017 ஜூலை 13 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை, மெதிரிகிரிய கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றில், கல்வி பயிலும் மாணவர்களில் 41 பேர், கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று மெதிரிகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
10ஆம் மற்றும் 11ஆம் வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களே, போதையில் தள்ளாடிய நிலையிலிருந்த போது கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் அனைவரும், நேற்றுக் காலையிலேயே பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில், ஏழு பேர் மாணவிகள் என்றும், 32 மாணவர்களின் கைகளில், கடுமையான வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவிகள் ஏழு பேரும், கடுமையான முறையில் எச்சரிக்கப்பட்டு, அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.
பாடசாலை நேரத்தில், அசாதாரண முறையில் நடந்துகொண்ட மாணவர்கள் 42 பேரை அழைத்து, அப்பாடசாலையின் பிரதியதிபர், விசாரணைகளை மேற்கொண்ட போதே, அவர்கள், போதையூட்டும் ஏதோவொரு பொருளைப் பயன்படுத்தியிருந்தமை கண்டறியப்பட்டது.
அதன் பின்னர், பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அந்த 41 பேரும், பொலிஸாரினால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையத்துக்கு, வாகனங்களில் அவ்வாறு அழைத்துச் செல்லும்போது, தம்வசம் வைத்திருந்த ஒருவகையான சிறுசிறு பொதிகளை, மாணவர்கள் வீதியில் வீசியெறிந்துள்ளனர். அதனை கண்டுபிடித்து எடுத்த பொலிஸார், அவற்றை பரிசோதனைக்கு உட்படுத்தியபோதே, மாணவர்கள், போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதன்பின்னர், அவர்களை கைதுசெய்த தாம், போதைப்பொருள் எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டபோது, மாணவர்களிடமிருந்து எவ்விதமான ஆக்கபூர்வமான தகவல்களும் கிடைக்கவில்லையென தெரிவித்ததுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
26 minute ago
30 minute ago
50 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
30 minute ago
50 minute ago
51 minute ago