2025 மே 22, வியாழக்கிழமை

48 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Kanagaraj   / 2013 மார்ச் 02 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். எம். மும்தாஜ்


48 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கல்பிட்டி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் கல்பிட்டி நகரில் மூவர் இரண்டு கிலோ கேரள கஞ்சாவுடன் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் மேலும் 46 கிலோ கஞ்சா கல்பிட்டி லாம்பு தீவில் மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

புத்தளம் பிரதேசத்தில் இந்தளவு பெரும் தொகை கஞ்சா கைப்பற்றப்பட்டது இதுவே முதற் தடவை என பொலிசார் தெரிவித்தனர்.

ஒவ்வொன்றும் இரண்டு கிலோ எடையுடைய 24 பொதிகள் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றின் பெறுமதி சுமார் 84 இலட்சம் எனவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் மூவரையும் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்த பொலிசார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




You May Also Like

  Comments - 0

  • MADURANKULIKURANKAAR Saturday, 02 March 2013 04:34 PM

    கேரளா கஞ்ஜா என்றால் சும்மாவா...!!!

    Reply : 0       0

    Ashashi Sunday, 03 March 2013 03:18 AM

    குரங்காரே, கஞ்ஜா சும்மா இல்லை காசு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .