2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

5 பிள்ளைகளை காட்டிலில் கைவிட்டு காதலனுடன் பறந்த தாய்

Editorial   / 2021 டிசெம்பர் 05 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தனது ஐந்து பிள்ளைகளையும் காட்டில் தவிக்கவிட்டுவிட்டு, முறையற்ற காதலனுடன் தாயொருவர் தலைமறைவான சம்பவம் வாரியபொல அம்பகடவர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

காட்டில் ஓரிடத்திலிருந்து பிள்ளைகள் அழும் சத்தம் கேட்பதாக, பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து பொலிஸார் மேற்​கொண்ட தேடுதலின் போதே, அந்த ஐந்து பிள்ளைகளும்  மீட்கப்பட்டனர்.

அந்த பிள்ளைகள் ஐவரும் கடந்த இரண்டு நாட்களாக எவ்விதமான உணவுமின்றி இருந்துள்ளனர் என அறியமுடிகின்றது. அந்த பிள்ளைகளில் சிறியவருக்கு 2 வயதெனவும் பெரிய பிள்ளைக்கு 12 வயதெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 பிள்ளைகளின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர். அன்றையநாள் மதுபோதையில் வந்திருந்த கணவன், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளார். இதன்போதே, தன்னுடைய ஐந்து பிள்ளைகளையும் அழைத்துச் சென்ற 35 வயதான தாய், காட்டில் தவிக்க பிட்டுவிட்டு, முறையற்ற காதலுடன் தப்பியோடிவிட்டார்.

பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட பிள்ளைகள் ஐவரும் நன்னடத்தை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்படும் வரையிலும் அப்பிள்ளைகளின் பெரிய தாயாரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .