2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

500 குளங்களை புனரமைக்க நடவடிக்கை

Super User   / 2013 ஏப்ரல் 18 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்தில் கைவிடப்பட்ட நிலையிலுள்ள 500 குளங்களை முழுமையாக புனரமைக்கப்படவுள்ளது என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்தார்.

இதன் மூலம் கைவிடப்பட்ட நிலையிலுள்ள 5,000 ஏக்கர் காணிகளில் நெல் வேளாண்மையை மேற்கொள்ளும் செயற்திட்டமொன்று முன்னெடுப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த 30 வருட கால யுத்தத்தினால் மாவட்டத்தில் சுமார் 1,000 குளங்கள் கைவிடப்பட்ட நிலையில் உள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 500 மில்லியன் ரூபா செலவில் 500 சிறியரக குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன. இதேவேளை மாவட்டத்திலுள்ள நடுத்தரத்திலான 500 குளங்களில் சேறு அகற்றும் பணி அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X