2025 மே 22, வியாழக்கிழமை

89 வைத்தியசாலைகளில் 350 தாதியர்களுக்கு வெற்றிடம்

Kogilavani   / 2013 ஜனவரி 16 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்                      

வடமத்திய மாகாண சபை நிர்வாகத்தின் கீழுள்ள 89 வைத்தியசாலைகளில் 35 வைத்தியர்களுக்கும் 350 தாதியர்களுக்குமான வெற்றிடம் நிலவுவதாக வடமத்திய மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் எச். பீ. சேமசிங்க தெரிவித்தார்.

அரசாங்கம் வடபகுதியில் விசேட கவனம்; செலுத்தவதினாலேயே இங்கு வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான வெற்றிடம் நிலவுதற்குக் காரணமாகுதென தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது அரசு வடபகுதியிலுள்ள அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வைத்தியாலைகளை புனரமைத்து சகல வசதிகளையும் வழங்கியுள்ளதோடு தேவையான வைத்தியர்கள், தாதியர்களையும் நியமித்துள்ளது.

இதனால் ரஜரட்ட வைத்திய பீடத்திலிருந்து வெளியாகும் வைத்தியர்கள் மற்றும் அநுராதபுரம் தாதியர்கள் பயிற்சி நிலையத்திலிருந்து வெளியாகும் தாதியர்கள் இப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யப் போதுமானவர்களாக இல்லை.

இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஓய்வு பெற்றுள்ள தாதியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவையில் மீண்டும் இணைத்துக் கொள்ள மிகவிரைவில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன எனவும் மாகாண சுகாhதாரத் துறை அமைச்சர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X