2025 மே 03, சனிக்கிழமை

9 மாதத்துக்குள் 2 இலட்சத்துக்கும் மேல் அபராதம்

Editorial   / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

டப்ளியூ. எம். பைசல்

இவ்வருடத்தின் முதல் ஒன்பது மாத காலப்பகுதிக்குள் ராஜாங்கன பொலிஸார் 2,887,000 ரூபாயை அபராதம் மூலம் அரசுக்கு வருமானமாக பெற்றுக் கொடுத்துள்ளனர்.

இப்பணம், மோட்டார் வாகனப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு ஊடாக தமுத்தேகம, நொச்சியாகம நீதவான் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட 513 வழக்குகளில் அபராதமாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட பணத் தொகையாகும்.

அதிகூடுதலான  350 வழக்குகள் குற்றச்செயல்களான மதுபானம், கசிப்பு வடித்தல் கஞ்சா ஹெரோய்ன் ஆகிய  போதை​ப்பொருள் பாவனை, விற்பனை போன்ற  செயல்களில் ஈடுபட்டு குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் மற்றும் அனுமதிப்பத்திரம் இல்லாமல் மணல் ஏற்றிச் செல்லல் ஆகிய வழக்குகளின் மூலம் தொடரப்பட்ட வழக்குகளில் அபராதமாகப்  பெறப்பட்டவையாகும்.

அதற்கடுத்ததாக மோட்டார் வாகான பிரிவு மூலம் வாகனங்கள் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரம், காப்புறுதிப்பத்திரம் இல்லாமல் செலுத்தியமை வீதி ஒழுங்கு விதிகளை மீறிச் சென்றமை ஆகிய குற்றங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என ராஜாங்கன பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர்  பீ. ரத்நாயக்கா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X