Thipaan / 2016 ஜனவரி 03 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர், எம். யூ. எம். சனூன்,ஹிரான் பிரியங்கர
இன்று வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றின் அடிப்படையில், புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி மாணவன் ஜே. எம். முன்ஸிப், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் மூன்று ஏ சித்திகளைப் பெற்று புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூயின் வரலாற்றில் மிகச் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுள்ளார்.
இவர் புத்தளம் மணல்த்தீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலய ஆசிரியர் ஏ.ஓ. ஜவுபர் முசாதிக், புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி ஆசிரியை பீ. எம். எஸ். றிஸ்வியா தம்பதியினரின் மகனாவார்.
புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியில் சாதாரண தரப் பரீட்சையினை எழுதி சிறந்த பெறுபேற்றைப் பெற்ற இம்மாணவர் புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரியில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தனது உயர் கல்வியைத் தொடர்ந்திருந்தார்.
தனக்கு இந்த வெற்றியைத் தந்த இறைவனுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்த மாணவர் முன்ஸிப் தனது பெற்றோருக்கும், தனது கல்லூரி அதிபர் உட்பட ஆசிரியர்கள் மற்றும் தனது நண்பர்களுக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதாகத் தெரிவித்தார்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago