Princiya Dixci / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கந்த, கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் கைதிகளுக்கு ஆலோசனை வழஙகிய அதிகாரிகள் ஐவர், கைதிகளின் கல் தாக்குதலுக்கு இலக்காகி, நேற்று திங்கட்கிழமை (31) பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மதுபானம் மற்றும் போதைவஸ்துக்களுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது தொடர்பாக ஆலோசனை வழங்க வந்த புனர்வாழ்வு ஆணையாளர் ஜெனராலின் உரை நீடித்துக்கொண்டு சென்றமையே கைதிகளின் கல் தாக்குதலுக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான ஐவரில் இரு அதிகாரிகள் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் இவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு காயங்களுக்கு இலக்கானவர்கள் கட்டுகஸ்தோட்டை மற்றும் கெகிராவை பகுதியை சேர்ந்த மேஜர் மற்றும் சிவில் பதவி வகித்தவர்கள் எனவும் இத்தாக்குதல் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
53 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
1 hours ago